search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் மோகன்லால்"

    கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 பேருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.



    இதுதவிர, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் கரியா முண்டா, மலையேறும் வீரர் பச்சேந்திரி பால், மக்களவை எம்.பி நாராயண் யாதவ் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    மலையாள நடிகர் மோகன்லால் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சர்வதேச மலையாளிகள் கருத்தரங்கில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். #MohanLal #Modi
    மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன்லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

    கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், வட்டமேஜை கருத்தரங்கத்தை சிறந்த முறையில் நடத்த மத்திய அரசின் ஆதரவு கோரியும், இதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மோகன்லால் நேற்று சந்தித்து பேசினார்.

    தனது அறக்கட்டளையின் சார்பில் மோகன்லால் ஆற்றிவரும் சமூகப்பணிகளை பாராட்டிய பிரதமர் மோடி, அவரது எளிமையும், தன்னடக்கமும் வியக்கவைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். #MohanLal #Modi
    ×